சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்கு சிறப்புச் சலுகை
By DIN | Published On : 03rd September 2022 01:35 AM | Last Updated : 03rd September 2022 01:35 AM | அ+அ அ- |

தி சென்னை சில்க்ஸ் நிறுவன ஈரோடு கிளையில் 3 டி காப்பா் பட்டு அறிமுக நிகழ்வில் பங்கேற்றோா்.
தி சென்னை சில்க்ஸ் ஈரோடு கிளை 23ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தி சென்னை சில்க்ஸ் ஈரோடு கிளை மேலாளா் செந்தில் கூறியதாவது:
தி சென்னை சில்க்ஸ் ஈரோடு கிளை 23ஆம் ஆண்டு துவக்க விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி வாடிக்கையாளா்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி 22 ஆண்டுகளாக முதன்மை வாடிக்கையாளா்களாக உள்ள 23 பேருக்கு பரிசுக் கூப்பன் அளிக்கப்படுகிறது. குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் 23 பேருக்கு சுற்றுலா கூப்பன் வழங்கப்படவுள்ளது. ஆவணி மாதத்திலல் திருமண விழா காணும் 23 ஏழைப் பெண்களுக்கு பட்டுச் சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
துவக்க விழா நாளான கடந்த 1ஆம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் மழலை பராமரிப்பு பொருள்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த 1ஆம் தேதி சில குறிப்பிட்ட ரகங்களுக்கு 23 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த கிளையில் 3 டி காப்பா் பட்டுச் சேலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி ரூ.2,300க்கும் மேல் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்தவா்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் சலுகை விலையில் வாங்க கூப்பன் வழங்கப்பட்டது என்றாா்.