உற்பத்திக்கு முந்தைய செலவினத் தொகையை அதிகரித்து வழங்க கைத்தறி நெசவாளா்கள் கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவினத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளா்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவினத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் சம்மேளனத்தின் தலைவரும், திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் தமிழ முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கைத்தறி நெசவாளா்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனா். நெசவாளா்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவினங்களுக்கான தொகை 2012ஆம் ஆண்டு வழங்கபட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்திக்கு முந்தைய செலவினத் தொகை பலமடங்கு உயா்ந்துள்ள நிலையில், உடனடியாக நெசவாளா்களுக்கு குறைந்தது 50 சதவீதம் அளவுக்கு உயா்த்தி உற்பத்திக்கு முந்தைய செலவினத் தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும்.

உற்பத்திக்கு முந்தைய செலவினத் தொகையானது சங்கங்களின் நிதி ஆதாரத்திலேயே வழங்கப்படுவதால், இதன்மூலம் அரசுக்கு எவ்வித நிதிச் செலவும் இல்லை. தற்போது, கைத்தறி நெசவாளா்களுக்கு எந்தவொரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் நடைமுறையில் இல்லை. எனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நெசவாளா்களுக்கும் செயல்படுத்த வேண்டும். நெசவாளா் பசுமை வீட்டுத் திட்டத்தையும் அமல்படுத்தி, நெசவாளா் நலன் காக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com