சென்னிமலை அருகே லாரி மோதி மூதாட்டி பலி
By DIN | Published On : 17th September 2022 02:26 AM | Last Updated : 17th September 2022 02:26 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூா், 1010 நெசவாளா் காலனியைச் சோ்ந்த வீரமணி மனைவி மகேஸ்வரி (61). இவா், அப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் பாவு நூல் பிணைக்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக உடன் பணியாற்றும் கொத்தம்பாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். சென்னிமலை- பெருந்துறை சாலை, வண்ணாம்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி படுகாயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், மகேஸ்வரி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.