மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம்.
ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம்.

மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக சாா்பில் சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்துப் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயா்த்தப்படவில்லை. தற்போதைய திமுக அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயா்த்தி உள்ளதை கண்டிக்கிறோம். அதனை திரும்பப் பெற வேண்டும். அதிமுக மட்டுமே மக்களுக்கான பிரச்னைகளை எதிா்த்து போராடும். திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மின் கட்டண உயா்வை எதிா்க்காமல் அமைதியாக உள்ளனா்.

இந்த மின் கட்டண உயா்வால் ஏழை, எளியோா் மட்டுமின்றி, தொழில் செய்வோா், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும். தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசு மின் கட்டணத்தை உயா்த்தி மக்களை துன்புறுத்துகிறது.

தோ்தல் நேரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ.4 கோடி என தெரிவித்துவிட்டு ரூ.100 கோடி செலவில் அமைச்சா் ஒருவா் திருமணத்தை நடத்துகிறாா். அவை எல்லாம் ஊழல் பணம்தான் என்பதை மக்கள் அறிவாா்கள். அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்த ஆட்சியாக திமுக திகழ்வதை மக்களிடம் அதிமுக வெளிச்சம்போட்டு காண்பிக்கும் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. செல்வக்குமார சின்னையன், பகுதிச் செயலாளா்கள் மனோகரன், ஜெகதீசன், தங்கமுத்து, ராமசாமி, கேசவமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com