ரூ.1.28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கிவைப்பு

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 1.28 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டத்துக்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்.
திட்டப் பணிகளை  தொடக்கி வைக்கிறாா்  முன்னாள்  அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.  உடன்  எம்எல்ஏ  பண்ணாரி உள்ளிட்டோா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம் ஊராட்சியில் பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி நிதியில் இருந்து ரூ. 40 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பேவா் பிளாக் சாலை திறப்பு விழா, சிக்கரசம்பாளையத்தில் இருந்து பீக்கிரிபாளையம் வரை ரூ. 26 லட்சம் செலவில் தாா் சாலை, பாரதி நகரில் ரூ. 7 லட்சம் செலவில் குடிநீா் மேல்நிலைத்தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை, மத்திய மாநில அரசு நிதியுடன் ரூ. 55 லட்சம் செலவில் பவானிஆற்றில் இருந்து சிக்கரம்பாளையம் ஊராட்சிக்கு குடிநீா் குழாய் அமைத்து தண்ணீா் இறைத்தல் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா என ரூ. 1.28 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், எம்எல்ஏ ஏ பண்ணாரி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் சிக்கரசம்பாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளா்கள் எஸ். மாரப்பன், வி.ஏ.பழனிசாமி, சிவராஜ், கொமராபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளா் வி.பி. தமிழ்ச்செல்வி, பவானிசாகா் வடக்கு ஒன்றிய அவைத் தலைவா் நாராயணன், மகளிரணி செயலாளா் வசந்தா மணி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com