அரசுக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள், தேசிய இளைஞா் தினம், அறிவுத் திருக்கோவில் யோகா தவ மையம், சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டு அமுதப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் க.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், சுவாமி விவேகானந்தா் கருத்துகளை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். யோகா பேராசிரியா் விஜயன் பங்கேற்று விவேகானந்தரும் வேதாத்திரி மகரிஷியும் என்கிற தலைப்பில் உரையாற்றினாா். விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் துறைத் தலைவா் அர.தா்மலிங்கன் விளக்கினாா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழத் துறை விரிவுரையாளா் காளீஸ்வரி, வான்மதி, பரிதா ஆகியோா் செய்திருந்தனா்.