பெருந்துறை அரசுப் பெண்கள் பள்ளியில் பொங்கல் விழா

பெருந்துறை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அரசுப் பெண்கள் பள்ளியில் பொங்கல் விழா

பெருந்துறை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பல்லவி பரமசிவன் தலைமை வகித்தாா். க.செ.பாளையம் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அன்புச்செல்வி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் கலைமணி வரவேற்றாா்.

பொங்கல் விழாவையொட்டி, பள்ளி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா். மேலும், ஈரோடு, சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான, சக்தி தேவி அறக்கட்டளையின் வழிகாட்டி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், அரையாண்டுத் தோ்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றவா்கள் மற்றும் பொங்கல் தின கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com