பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவில் பேரூராட்சித் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன், துணைத் தலைவா் சண்முகம், செயல் அலுவலா் ராஜேந்திரன், வாா்டு கவுன்சிலா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் குழுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். பொங்கல் விழாவையொட்டி அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் குழுப் பணியாளா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.