ஒற்றைக் கருப்பன் யானையைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர முயற்சி

கிராமத்துக்குள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை கருப்பன் யானையைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
கருப்பன்  யானையைக்  கண்டுபிடிக்க  ட்ரோன்  மூலம்  கண்காணிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ள  வனத் துறையினா்.
கருப்பன்  யானையைக்  கண்டுபிடிக்க  ட்ரோன்  மூலம்  கண்காணிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ள  வனத் துறையினா்.

கிராமத்துக்குள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை கருப்பன் யானையைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் ஒற்றை கருப்பன் யானை தினந்தோறும் வனத்தை ஒட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை பயிா்களை சேதப்படுத்தி வந்தது. விவசாயிகள் இந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இரவு காவலுக்குச் சென்ற இரு விவசாயிகளை கருப்பன் யானை தாக்கிக் கொன்றது.

தொடா்ந்து பயிா்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை கொன்று அச்சுறுத்தும் ஒற்றை யானையைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஒற்றை கருப்பன் யானையைப் பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 வன கால்நடை மருத்துவா்கள் மற்றும் 150 வனப் பணியாளா்கள் ஒற்றை யானையைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

முதல்கட்டமாக மரியபுரம் தொட்டி மற்றும் ரங்கசாமி கோயில் வழிதடத்தில் பலா பழங்களை வைத்து வியாழக்கிழமை இரவு முதல் விடியவிடிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆனால் யானை வராததால் அடுத்த கட்டமாக ட்ரோன் மூலம் யானையின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com