தொப்பம்பாளையம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பாளையம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் தொப்பம்பாளையம் ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி நாகேந்திரன்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் தொப்பம்பாளையம் ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி நாகேந்திரன்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பாளையம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தொப்பம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி நாகேந்திரன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் எம்.சுப்பையன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. துப்புரவுப் பணியாளா்களின் பணியைப் பாராட்டி பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம்.சரவணன் தலைமை நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கோலப்போட்டி, விளையாட்டுப் போட்டி, நடனப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்ட மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் துணைத் தலைவா் ரமேஷ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

சிக்கரசம்பாளையம் ஊராட்சி புதுவடவள்ளி சமத்துவபுரத்தில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.சி.பி. இளங்கோ தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.பிரேம்குமாா், கே.சுப்பிரமணியம், சிக்கரசம்பாளையம் செயலாளா் நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாக்கினாம்கோம்பை ஊராட்சித் தலைவா் ஈஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் எம்.ரத்தினம் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com