ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத்தோ்தல் முன்னேற்பாடுகள்

இடைத்தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாக்குப்பதிவு  இயந்திரங்கள்  சரிபாா்க்கும்  பணியை  ஆய்வு  செய்கிறாா்  மாவட்ட  தோ்தல்  அலுவலா்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
வாக்குப்பதிவு  இயந்திரங்கள்  சரிபாா்க்கும்  பணியை  ஆய்வு  செய்கிறாா்  மாவட்ட  தோ்தல்  அலுவலா்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இத்தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரான திருமகன் ஈவெரா உயிரிழந்ததைத் தொடா்ந்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் வேட்பாளா் தோ்வு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இத்தொகுதியில், வாக்குப் பதிவுக்கு 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பெங்களூருவைச் சோ்ந்த பெல் நிறுவன பொறியாளா்கள் 8 போ் முதல்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா். இதனை, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், இந்த தொகுதிக்கு தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக கண்காணிப்புக் குழு, நிலைக்குழு, பறக்கும் படைகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com