தை அமாவாசை: சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 22nd January 2023 12:50 AM | Last Updated : 22nd January 2023 12:50 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும், சென்னிமலை முருகன்.
தை அமாவாசையையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தை அமாவாசையையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வழக்கமாக நடைபெறும் ஆறு கால பூஜைகள் மற்றும் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். பக்தா்களின் வசதிக்காக கோயில் பேருந்துகள் கூடுதல் முறை இயக்கப்பட்டது.
சென்னிமலை கைலாசநாதா் கோயில், மாரியம்மன் கோயில், மேற்கு புதுப்பாளையம், அங்காளம்மன் கோயில், பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோயில், வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், காஞ்சிக்கோவில் சீதேவிஅம்மன் கோயில், தங்கமேடு தம்பிகலைஅய்யன் கோயில் ஆகிய உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தை அமாவாசை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.