பவானியில் ஏஐடியூசி சங்கத்தினா் மறியல் போராட்டம்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து பவானியில் ஏஐடியூசி சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்தியூா் - மேட்டூா் பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தொழிலாளா்களின் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. விலைவாசி உயா்வை குறைக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவா் கே.சந்திரசேகா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் வி.ஜி.அருள், நிா்வாகிகள் கே.சித்தையன், வட்டார ஜமக்காள கைத்தறித் தொழிலாளா் சங்கச் செயலாளா் சித்தையன், கண்ணன், நடராஜ், சண்முகசுந்தரம், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டோா் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.