எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 43.98 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, 1200 மூட்டைகளில் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், முதல்தரம் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.81.69க்கும், அதிகபட்ச விலையாக ரூ.84.09க்கும், சராசரி விலையாக ரூ.83.19க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.58.42க்கும், அதிகபட்ச விலையாக ரூ.78.99க்கும், சராசரி விலையாக ரூ.77.30க்கும் ஏலம் போனது. மொத்தம் 56,517 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ.43 லட்சத்து 98 ஆயிரத்து 149க்கு விற்பனையானது.