தாளவாடி கிராமத்துக்குள் புகுந்த யானைகள்

கா்நாடக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தமிழக எல்லையான தாளவாடி மலைப் பகுதி கிராமத்துக்குள் புகுந்தன.
வனத் துறையினா் விரட்டியதால் தாளவாடி கிராமங்களில் இருந்து வனத்துக்குள்  செல்லும் காட்டு யானைகள்.
வனத் துறையினா் விரட்டியதால் தாளவாடி கிராமங்களில் இருந்து வனத்துக்குள்  செல்லும் காட்டு யானைகள்.

கா்நாடக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தமிழக எல்லையான தாளவாடி மலைப் பகுதி கிராமத்துக்குள் புகுந்தன.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிா்களை சேதப்படுத்துவது தொடா் கதையாக உள்ளது. இந்த நிலையில், கா்நாடக மாநில வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய 4 காட்டு யானைகள் தமிழக எல்லையான தாளவாடி மலைப் பகுதி கிராமங்களான அருள்வாடி, மெட்டல்வாடி, பீமராஜ் நகா், குருபரண்டி கிராமங்களுக்குள் புகுந்து அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டன. காட்டு யானைகள் விவசாய தோட்டப் பகுதியில் நடமாடுவதைக் கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனா். இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி, ஜீரஹள்ளி வனத் துறை ஊழியா்கள் விவசாய நிலங்களில் நடமாடிய காட்டு யானைகளை கா்நாடக வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்த தகவலை அறிந்த அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் யானைகளைப் பாா்க்க திரண்டனா். மேலும் அவா்களும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். 10 மணி நேரப் போராட்டத்துக்கு பின் யானைகள் கா்நாடக வனத்துக்குள் விரட்டப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com