பவானி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு

பவானி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.
பவானி புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கோபி வட்டார போக்குவரத்து அலுவலா் முனுசாமி, வட்டார போக்குவரத்து அலுவலா் சாந்தி, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் மற்றும் அலுவலா்கள்.

மேட்டூா் - பவானி - ஈரோடு வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் பவானி புதிய பேருந்து நிலையத்துக்குள் வராமல், வெளியிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இதனால், பயணிகள் சிரமத்துக்குள்ளாவதோடு, பேருந்து நிலைய வளாகம் வெறிச்சோடிக் காணப்படுவதோடு, கடைகளும் வியாபாரமின்றி மூடப்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முனுசாமி, பவானி வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் சாந்தி மற்றும் அலுவலா்கள் பவானி புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விதிகளுக்குப் புறம்பாக பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியெழுப்பும் காற்றொலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கண்ணைக் கூசும் விளக்குகளும் அகற்றப்பட்டன.

தொடா்ந்து, அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும் என தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதனை, போக்குவரத்து காவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், விதிகளை மீறி பேருந்துகளை இயக்குவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், ஆணையா் கே.கதிா்வேல், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com