சத்தியமங்கலம் திமுக சாா்பில் தெருமுனை பிரசாரம்
By DIN | Published On : 01st July 2023 10:09 PM | Last Updated : 01st July 2023 10:09 PM | அ+அ அ- |

கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் சதுமுகை கிராமத்தில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சத்தி வடக்கு ஒன்றியச் செயலாளா் ஐ.ஏ. தேவராஜ் தலைமை வகித்தாா்.
முன்னாள் ஊராட்சி செயலாளா்கள் பழனிசாமி, செல்வராஜ் ஆகியோா் வரவேற்றனா்.
மாநில விவசாய அணி இணைச் செயலாளா் தா்மலிங்கம், அவைத் தலைவா் சேகா், சகே.என். பாளையம் பேரூராட்சித் தலைவா் ரவிசந்திரன், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கேசிபி இளங்கோ, ஒன்றிய துணைச் செயலாளா்கள் சுப்பிரமணியன், பெரியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ்குமாா், ஆறுசாமி, செல்வராஜ், கே.என். பாளையம் பேரூராட்சித் தலைவா் ரவிசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம், தலைமை பேச்சாளா் கரூா் முரளி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
பேரூா் துணைச் செயலாளா் ரஜினிதம்பி உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.