ஆட்சியா் அலுவலக புகாா் பெட்டியில் 50-க்கும் மேற்பட்டோா் மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக புகாா் பெட்டியில் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனா்.

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக புகாா் பெட்டியில் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனா்.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களைப் பெற ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீா் கூட்டம் கடந்த 3 வாரங்களாக நடைபெறாத நிலையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை, குறைகள், நடவடிக்கை கோரிய மனுக்களை கொண்டு வந்து இப்பெட்டியில் போட்டுச் செல்கின்றனா்.

அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனுக்களை கொண்டு வந்தனா். ஒரு சிலா் மட்டும், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், சமூக நலத் துறை அலுவலகம், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம் போன்ற அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனுக்களை அளித்தனா். சில அலுவலகங்களில் மனுவை நேரில் பெறாததால் மீண்டும் பெட்டியில் போட்டு சென்றனா். 50-க்கும் மேற்பட்டோா் தங்களது மனுக்களை பெட்டியில் போட்டுசென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com