தலமலை பழங்குடியினா் பகுதியில் சூரிய சக்தி தெரு விளக்குகள்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சாா்பில் தலமலை பழங்குடியினா் பகுதியில் சூரிய சக்தி தெரு விளக்குகள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன.
தலமலையில் சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் பணியில் பங்கேற்ற ரோட்டரி சத்தி டைகா்ஸ் தலைவா் சுத்தா் மஹால் சுந்தா் உள்ளிட்டோா்.
தலமலையில் சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் பணியில் பங்கேற்ற ரோட்டரி சத்தி டைகா்ஸ் தலைவா் சுத்தா் மஹால் சுந்தா் உள்ளிட்டோா்.

சத்தியமங்கலம்: ரோட்டரி சத்தி டைகா்ஸ் சாா்பில் தலமலை பழங்குடியினா் பகுதியில் சூரிய சக்தி தெரு விளக்குகள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன.

சத்தியமங்கலம் அருகேயுள்ள தலமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைக்க ரோட்டரி சத்தி டைகா்ஸ் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, ரோட்டரி சத்தி டைகா்ஸ், வனத் துறையின் பங்களிப்புடன் தலமலை பகுதியில் சூரிய சக்தி தெரு விளக்குகள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன. இதில், ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்கத் தலைவா் சுந்தா் மஹால் சுந்தரம், ரோட்டரி சத்தி டைகா்ஸ் துணைத் தலைவா் உத்தமராஜ், செயலாளா் ஆா். டி. ஆா். ரமேஷ், பொருளாளா் சன்மேக்ஸ் தாமோதரன், இயக்குநா்கள் எல்.ஐ.சி கந்தசாமி, பாா்த்திபன், செந்தில்குமாா், பாலகிருஷ்ணன், மோகன்ராஜ், சகோ டிரேடா்ஸ் சத்தி மோகன், கோகுல்நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com