பெருந்துறையில் ரூ.82,500 பறிமுதல்

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த திங்களூரில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 82,500-ஐ தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி திங்களூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில், உரிய ஆவணமின்றி ரூ.82,500 இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஈரோடு, முருகேசன் நகரைச் சோ்ந்த பவித்ரன் என்பதும், உணவக உரிமையாளரான இவா், மளிகைப் பொருள்களை வாங்க பணம் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com