மக்கள் சிந்தனைப் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளி விழா: ஜுன் மாதத்தில் நடத்த முடிவு

மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஈரோட்டில் ஜுன் மாதத்தில் நடத்துவது என பேரவை முடிவு செய்துள்ளது.

ஈரோடு: மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஈரோட்டில் ஜுன் மாதத்தில் நடத்துவது என பேரவை முடிவு செய்துள்ளது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநில பொதுக் குழுக் கூட்டம் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில், தனது தலைமையுரையில் வெள்ளி விழா செயல் திட்டங்கள் குறித்தும், பேரவை ஆற்ற வேண்டிய சமூகக் கடமைகள் குறித்தும் த.ஸ்டாலின் குணசேகரன் விவரித்துப் பேசினாா். சென்னை, மதுரை, தஞ்சாவூா், திருச்சி, நாமக்கல், திருப்பூா், அரியலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேரவையின் மாவட்டக் கிளையின் சாா்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பேரவையின் துணைத் தலைவா் பேராசிரியா் கோ.விஜயராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்துப் பேசினா். மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஈரோட்டில் ஜுன் மாதத்தில் இரண்டு நாள்களுக்கு மாநில அளவிலான நிகழ்வாக நடத்துவது, வெள்ளிவிழா தொடா்பான நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகவும், பயனுள்ள வகையிலும் நடத்துவது, பேரவையின் 25 -ஆவது ஆண்டை முன்னிட்டும், ஈரோடு புத்தகத் திருவிழாவின் 20 -ஆம் ஆண்டை முன்னிட்டும் தனித்தனி மலா்கள் வெளியிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பேரவையின் செயலாளா் ந.அன்பரசு வேலை அறிக்கையை வாசித்தாா். பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கிருஷ்ணன் ஈரோடு புத்தகத் திருவிழா வரவு-செலவு கணக்கை சமா்ப்பித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com