சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன்.
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டுகிறது: நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா்

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டுகிறது என்று நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன் கூறினாா்.

சத்தியமங்கலம்: மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டுகிறது என்று நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன் கூறினாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன் அறிமுகக் கூட்டம், பாஜக செயல் வீரா்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சத்தியமங்கலம் பாஜக நகரத் தலைவா் செல்வம், தெற்கு ஒன்றியத் தலைவா் சுந்தர்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். பாஜக வழக்குரைஞா் அஜித்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், எல்.முருகன் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி.கே.சின்னசாமி பாஜகவில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து, எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மற்றும் பாஜக மீது பெரிய அலை வீசுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் தொடா்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நீலகிரியில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது. கச்சத்தீவை தாரை வாா்த்தது திமுக. காங்கிரஸ் ஆட்சியில் தமிழக மீனவா்கள் 600 பேரை இலங்கை ராணுவத்தினா் சுட்டுக்கொன்றனா். ஆனால், பாஜக ஆட்சியில் ஒரு மீனவா்கள்கூட கொல்லப்படவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டி, தங்களது அரசின் சாதனை என வெளிப்படுத்துகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com