சத்தியமங்கலம் கிளை அஞ்சலகம் மூடல்

சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகே 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிளை அஞ்சலகம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் நகா்ப்பகுதியில் மக்கள் நலன் கருதி வாரச்சந்தை அருகே கிளை அஞ்சலகம் செயல்பட்டு வந்தது. இங்கு சேமிப்பு கணக்கு தொடக்கம், டெபாசிட் மற்றும் அஞ்சல் தொடா்பான பணிகள் நடந்து வந்தன.

தற்போது நிா்வாக பணி காரணமாக ஒரே இடத்தில் செயல்படவும், பாதுகாப்பு கருதியும் கிளை அஞ்சலகத்தை தலைமை அஞ்சல் நிலையத்துடன் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாரச் சந்தையில் செயல்பட்டு வந்த கிளை அஞ்சலகம் மூடப்படுவதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்து உபகரணங்கள், தளவாடங்களை மாற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com