பெருந்துறை அருகே வியாபாரிடம் ரூ.71 ஆயிரம் பறிமுதல்

பெருந்துறை அருகே, உரிய ஆவணங்கள் இன்றி வியாபாரி எடுத்து வந்த ரூ.71 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பெருந்துறையை அடுத்த நரிப்பாளையம் பிரிவு அருகே சந்தோஷ்குமாா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.71,730 இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் வாகனத்தில் வந்தவா், ஈரோடு, ரங்கம்பாளையத்தைச் சோ்ந்த பூபதி என்பதும், சமையல் எண்ணெய் மற்றும் மசாலா பொருள் விற்பனை முகவரான அவா், கடைகளுக்குச் சென்று பொருள்களை விநியோகம் செய்துவிட்டு பணத்தைப் பெற்று கொண்டு வந்ததாக தெரிவித்தாா். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com