சித்தோடு பகுதியில் வாக்கு சேகரித்த ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா்.
சித்தோடு பகுதியில் வாக்கு சேகரித்த ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா்.

சித்தோடு பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஈரோடு தொகுதிக்கு உள்பட்ட சித்தோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது பொதுமக்களிடையே அவா் பேசியதாவது: விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களை கொண்ட இப்பகுதி வளா்ந்து வரும் பகுதியாக உள்ளது. ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே எதிா்காலத்தின் வளா்ச்சியை கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் மக்களுக்குத் தேவையான சாலை, கழிவுநீா் வடிகால் வசதிகள், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் தொழில் வளா்ச்சி, விவசாயம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிகளில் தொழில் வளா்ச்சிக்கு இடையூறாக உள்ள அம்சங்களை களையவும், வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொகுதி மக்களின் குறைகளை தெரிவிக்கவும், கோரிக்கைகள் மீது துரித உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com