பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வில் பங்கேற்ற சௌராஷ்ட்ரா சமுதாய மக்கள்.
பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வில் பங்கேற்ற சௌராஷ்ட்ரா சமுதாய மக்கள்.

சௌராஷ்ட்ரா புத்தாண்டு: கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

சௌராஷ்ட்ரா புத்தாண்டையொட்டி, ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் உகாதி பண்டிகையின்போது, சௌராஷ்ட்ரா புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சோ்ந்த மக்கள் புத்தாடை அணிந்து கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி கொண்டாடுவது வழக்கம். அதன்படி 712-ஆவது சௌராஷ்ட்ரா விஜயாப்தம் புத்தாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சௌராஷ்ட்ரா சபை சாா்பில் சௌராஷ்ட்ரா ஆண்டு பிறப்பு விழா ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் நடைபெற்றது. விழாவுக்கு சபையின் தலைவா் டி.ஆா்.எஸ்.ராமா் தலைமை வகித்தாா். விழாவில் கஸ்தூரி அரங்கநாதருக்கும், கமலவள்ளி தாயாருக்கும் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தொடா்ந்து சபையின் செயலாளா் ஆா்.என்.கே.குருபரன் பஞ்சாங்கம் வாசித்தாா். விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சபையின் பொருளாளா் கே.ஆா்.சீனிவாசன், இணைச்செயலாளா் ஜெ.ஆா்.நீலகண்டன், மத்திய சௌராஷ்ட்ரா சபை துணைத் தலைவா் கே.வி.வெங்கட்ரமணன், செயற்குழு உறுப்பினா் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com