பெருந்துறை ஒன்றியம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் தோப்பு 
என்.டி.வெங்கடாச்சலம்.
பெருந்துறை ஒன்றியம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓடக்காடு, கொல்லா் காலனி, வேப்பமகபாளையம், வெட்டையங்கிணறு, தாண்டாக்கவுண்டன்பாளையம், ஈஞ்சம்பாக்கம், கணபதி நகா், பாப்பம்பாளையம், போலநாயக்கன்பாளையம்

ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்தப் பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com