ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு ஏப்ரல் 13-இல் வீரா்கள் தோ்வு

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவா் சங்கரராமநாதன், செயலாளா் சுரேந்திரன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்டங்களுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கு, ஈரோடு மாவட்ட அணிக்கு 19 வயதுக்கு உள்பட்ட வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கான போட்டி ஈரோடு பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம், சக்தி நகரில் உள்ள எஸ்எஸ் அகாதெமி பயிற்சி மையத்தில் வரும் 13- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இந்த தோ்வு போட்டியில் 1-9-2005 ஆம் ஆண்டுக்கு பின்னா் பிறந்த ஆண்கள் பங்கேற்கலாம். விளையாட விருப்பம் உள்ள கிரிக்கெட் வீரா்கள் தங்களது பிறப்பு சான்றுடன் வந்து கலந்துகொள்ளலாம். வீரா்கள் வெள்ளை நிற சீருடை, விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com