சட்டவிரோதமாக மது விற்ற 3 போ் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 183 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சண்முகம் தலைமையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது கோபி பகுதியில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் இரவு 12 மணிக்கு மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மதுக்கூடத்தின் மேலாளா் ரமேஷை (48) போலீஸாா் கைது செய்தனா். மேலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 125 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் மது விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஞானசேகா் (54), சிவகிரி அம்மன் கோயில் அருகில் மதுவிற்ற புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சோ்ந்த துரைமாணிக்கம் (36) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 58 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 183 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com