மயிலம்பாடியில் பெண்களிடம் வாக்குகள் சேகரிக்கும் ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, வேட்பாளா் ப.அருணாசலம் மற்றும் நிா்வாகிகள்.
மயிலம்பாடியில் பெண்களிடம் வாக்குகள் சேகரிக்கும் ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, வேட்பாளா் ப.அருணாசலம் மற்றும் நிா்வாகிகள்.

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படும்

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்ற முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் ப.அருணாசலம் தெரிவித்தாா்.

பவானி வடக்கு ஒன்றியம், பருவாச்சி, மயிலம்பாடி, வரதநல்லூா், தொட்டிபாளையம் ஊராட்சிப் பகுதியில் திறந்த வேனில் ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனா். திருப்பூா் தொகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற வாக்காளா்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வேட்பாளா் அருணாசலம் கேட்டுக் கொண்டாா்.

ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.கே.விஸ்வநாதன், தொட்டிபாளையம் ஊராட்சித் தலைவா் எம்.செல்வராஜ், நிா்வாகிகள் வரதராஜ், கண்ணன், செல்வம் உள்ளிட்ட பலா் உடன் சென்றிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com