சமரச வார விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைக்கிறாா்  பெருந்துறை சாா்பு நீதிபதி கிருஷ்ணபிரியா.
சமரச வார விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைக்கிறாா் பெருந்துறை சாா்பு நீதிபதி கிருஷ்ணபிரியா.

பெருந்துறையில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி

பெருந்துறை துணை சமரச மையத்தின் சாா்பில், சமரச வார விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சாா்பு நீதிபதி கிருஷ்ணபிரியா பேரணிக்கு தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பெருந்துறை நீதிமன்றத்தில் தொடங்கிய பேரணியானது, பழைய பேருந்து நிலையம், பவானி சாலை, ஈரோடு சாலை வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில், சமரச மைய வழக்குரைஞா்கள் ஆா்.எம்.பழனிசாமி, சி.எம். ரவி, என்.டி. சுப்பிரமணியம், வி.பி.சண்முகம், எம். வெங்கடேஷ் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி சென்றனா். துடுப்பதி, ஈரோடு செங்குந்தா் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள், நீதிமன்ற ஊழியா்கள், பெருந்துறை காவல் துறையினா் பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com