மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளான வரும் 19- ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளா்களுக்கு வாக்குப்பதிவு நாளான வரும் 19- ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கூட்டம் ஈரோடு தொழிலாளா் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் தலைமை வகித்தாா். துணை ஆணையா்(பணிக்கொடை) த.முருகேசன், உதவி ஆணையா்(அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம், உதவி ஆணையா்(சமரசம்) ந.ராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் இணை ஆணையா் பா.மாதவன் பேசியதாவது:

தோ்தல் நாளான வரும் 19- ஆம் தேதி அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொதுநிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்கள், கடைகள் தங்களது தொழிலாளா்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்யும் வகையில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் வரும் 19- ஆம் தேதி பிடித்தம் இன்றி முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். இதை மீறி செயல்படும் தொழில் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com