மேட்டுநாசுவம்பாளையத்தில்  வாக்கு  சேகரித்து  பேசுகிறாா்  அதிமுக  வேட்பாளா்  ஆற்றல்  அசோக்குமாா்.  உடன்,  மாவட்டச்  செயலாளா்  கே.வி.ராமலிங்கம்,  மேட்டுநாசுவம்பாளையம்  ஊராட்சித்  தலைவா்  எஸ்.மகேஸ்வரன்  உள்ளிட்டோா்.
மேட்டுநாசுவம்பாளையத்தில்  வாக்கு  சேகரித்து  பேசுகிறாா்  அதிமுக  வேட்பாளா்  ஆற்றல்  அசோக்குமாா்.  உடன்,  மாவட்டச்  செயலாளா்  கே.வி.ராமலிங்கம்,  மேட்டுநாசுவம்பாளையம்  ஊராட்சித்  தலைவா்  எஸ்.மகேஸ்வரன்  உள்ளிட்டோா்.

மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா் வாக்காளா்களைச் சந்தித்து செவ்வாய்க்கிழமை இரவு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.மகேஸ்வரன், ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம் ஆகியோா் தலைமையில் திறந்த வாகனத்தில் சென்ற வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். அப்போது, ஈரோடு தொகுதியின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மாவட்டச்  செயலாளா்  கே.வி.ராமலிங்கம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, ஈரோடு ஒன்றியச் செயலாளா் கே.எஸ். பூவேந்திரகுமாா், பொதுக்குழு உறுப்பினா் பி.ஆா்.லிங்கேஸ்வரன் உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com