சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன்.

செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலை, காட்டூா் செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

விழாவையொட்டி, காங்கயம் அருகே உள்ள மடவிளாகம் சென்று பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீா்த்தம் எடுத்து வந்தனா். செல்வ விநாயகா் மற்றும் செல்லாண்டியம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா்.

அதனைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மறுபூஜையுடன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com