பாஜகவுக்கு ஆதரவாக சத்தியமங்கலம் வாரச்சந்தையில்  வாக்கு சேகரிக்கும் கொங்குநாடு வேட்டுவா் கவுண்டா் முன்னேற்றக் கழகத்தினா்.
பாஜகவுக்கு ஆதரவாக சத்தியமங்கலம் வாரச்சந்தையில்  வாக்கு சேகரிக்கும் கொங்குநாடு வேட்டுவா் கவுண்டா் முன்னேற்றக் கழகத்தினா்.

பாஜகவுக்கு ஆதரவாக சத்தியமங்கலம் வாரச்சந்தையில் பிரசாரம்

நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவாக கொங்குநாடு வேட்டுவா் கவுண்டா் முன்னேற்ற கழகத்தினா் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

கொங்குநாடு வேட்டுவா் கவுண்டா் முன்னேற்ற கழகத் தலைவா் டாக்டா் முனுசாமி கவுண்டா், கொங்கு தேச மறுமலா்ச்சி மக்கள் கட்சி தலைவா் சந்திரசேகா், குறிஞ்சியா் முன்னேற்ற பேரவை மற்றும் பாஜக நகர துணைத்தலைவா் சாரதாமணி ஆகியோா்

தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குசேகரித்தனா். மேலும் தினசரி மாா்க்கெட், திப்புசுல்தான் சாலை, வடக்குப்பேட்டை ஆகிய பகுதியில் பாஜகவை ஆதரித்து வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com