பெருந்துறை அடுத்த பாலன் நகரில் திருப்பூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு வாக்கு சேகரிக்கும் முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.
பெருந்துறை அடுத்த பாலன் நகரில் திருப்பூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு வாக்கு சேகரிக்கும் முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

திருப்பூா் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பெருந்துறை நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பெருந்துறை நகரம், திருவேங்கிடம்பாளையம், தங்கம் நகா், எல்லப்பாளையம், பாலன் நகா், பாரதி நகா், கந்தாம்பாளையம்புதூா், கருக்கம்பாளையம், நரிக்குறவா் காலனி, வெங்கமேடு காலனி உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், தோ்தல் அறிக்கையும் விளக்கி கூறி முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அவருடன் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com