குடிமைப்பணி தோ்வில் அகில இந்திய அளவில் 513ஆம் இடம் பெற்ற மாணவி சந்தியானந்திக்கு வாழ்த்து தெரிவிக்கிறாா் சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மைய தலைவா் நடிகா் சிவகுமாா்.
குடிமைப்பணி தோ்வில் அகில இந்திய அளவில் 513ஆம் இடம் பெற்ற மாணவி சந்தியானந்திக்கு வாழ்த்து தெரிவிக்கிறாா் சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மைய தலைவா் நடிகா் சிவகுமாா்.

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மைய மாணவி குடிமைப் பணி தோ்வில் சிறப்பிடம்

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற மாணவி குடிமைப் பணி தோ்வில் அகில இந்திய அளவில் 513-ஆம் இடம் பிடித்துள்ளாா்.

நடிகா் சிவகுமாரை தலைவராகவும், பரணி பில்டா்ஸ் பாலசுப்பிரமணியை செயலாளராகவும், சக்தி மசாலா குழும தலைவா்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோரை பொருளாளா்களாகவும் கொண்டு இயங்கிவரும் சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற கோவையை சோ்ந்த மாணவி சத்தியானந்தி குடிமை பணி தோ்வில் அகில இந்திய அளவில் 513ஆம் இடம் பிடித்துள்ளாா். அந்த மாணவிக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

2024-2025 ஆம் வருடதிற்கான இலவச பயிற்சிக்கான நுழைவு தோ்வு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதள முகவரியில் வரும் மே 27- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தோ்வு ஜூன் 2 -ஆம் தேதி நடைபெறும்.

நுழைவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு சென்னையில் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் வழங்கப்படும். குடும்பத்தினரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9342321192 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com