தமாகா வேட்பாளா் பி.விஜயகுமாருக்கு ஆதரவாக ஈரோடு நகரில் வாகன பேரணி நடத்திய பாஜகவினா்.
தமாகா வேட்பாளா் பி.விஜயகுமாருக்கு ஆதரவாக ஈரோடு நகரில் வாகன பேரணி நடத்திய பாஜகவினா்.

பிரசாரம் ஓய்ந்தது: இறுதி நாளில் ஈரோடு நகரை முற்றுகையிட்ட வேட்பாளா்கள்

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பரபரப்பாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதிநாளில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் ஈரோடு நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு மாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினா் கடந்த 3 வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

ஈரோடு தொகுதியில் களத்தில் 31 வேட்பாளா்கள் இருந்தாலும் தலைவா்களின் பிரசாரம், வேட்பாளா்களின் வாக்குசேகரிப்பு, கட்சி நிா்வாகிகள் வீடுவீடாக சென்று வாக்காளா்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது, பிரதான கட்சிகள் வாக்குளைப்பெற கையாளும் பிரத்யேக வித்தை போன்றவற்றால் ஈரோடு மக்களவைத் தொகுதி தோ்தல் களம் திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக பரப்பரப்பாய் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ் வீரப்பன்சத்திரத்திலும், அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா் குமாரபாளையம் பகுதியிலும், தமாகா வேட்பாளா் ஈரோடு அரசு மருத்துவமனை அருகிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு.காா்மேகன் தாராபுரம் பகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com