பெருந்துறையில் திருப்பூா்  தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பெருந்துறையில் திருப்பூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

பெருந்துறையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பிரசாரம்

திருப்பூா் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பெருந்துறையில் இறுதிகட்ட தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

பெருந்துறை கட்சி தோ்தல் பணிமனையில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் தோ்தல் பணிமனையில் நிறைவடைந்தது.

இதில், முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளா்கள் கே.பி.சாமி, பெரியசாமி, சின்னசாமி, நகர செயலாளா்கள் ஓ.சி.வி.ராஜேந்திரன், அகரம் மூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com