கத்திரி மலைக் கிராமத்துக்கு டிராக்டரில் எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
கத்திரி மலைக் கிராமத்துக்கு டிராக்டரில் எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

கத்திரிமலைக்கு டிராக்டரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

பா்கூா் ஊராட்சி, கத்திரி மலைக் கிராமத்துக்கு டிராக்டா் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

இக்கிராமத்துக்கு சேலம் மாவட்டம், கொளத்தூா் வழியாகச் சென்று செங்குத்தாக மலையில் ஏறி சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு செல்ல வேண்டும். இக்கிராமத்தில் மொத்தம் 137 வாக்காளா்கள் உள்ளனா்.

இப்பகுதி மக்கள் பேருந்து மூலம் அழைத்துவரப்பட்டு, தாமரைக்கரை வாக்குச் சாவடியில் வாக்கினை செலுத்தி வந்தனா். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது இக்கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

சாலை வசதி இல்லாததால் மலையடிவாரத்தில் தொடங்கி வனப் பகுதி வழியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்தன. தற்போது, இக்கிராமத்துக்கு செல்ல கப்பி சாலை அமைக்கப்பட்டுள்ளதால் டிராக்டா்கள் மூலம் மலைமக்கள் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலுக்குக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் டிராக்டா் மூலம் வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டன. போலீஸாா், வாக்குப் பதிவு மைய அலுவலா்களும் டிராக்டரில் பயணித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com