தாளவாடியில் கன மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தாளவாடியில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக பயிா்கள் காய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாளவாடியில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால், வெயிலில் தவித்துவந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

விளைநிலங்களில் குறிப்பிட்ட அளவு மழைநீா் தேங்கியதால், அது காய்ந்திருந்த பயிா்களுக்கு உயிா் கொடுக்கும் வகையில் இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com