ஈரோடு மக்களவைத் தொகுதியில் 10, 86, 287 வாக்காளா்கள் வாக்களிப்பு: 70.59 சதவீதம் வாக்குப் பதிவு

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 வாக்காளா்கள் (70.59 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 வாக்காளா்கள் (70.59 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள காங்கயம், தாராபுரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 927 ஆண்கள், 7 லட்சத்து 93 ஆயிரத்து 667 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 184 போ் என 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 1,688 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து சராசரியாக காலை 9 மணி வரை 13.37 சதவீதம், காலை 11 மணி வரை 28.29, நண்பகல் 1 மணிக்கு 43.54, மாலை 3 மணிக்கு 54.13, மாலை 5 மணி 65.13 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு நிறைவில் மொத்தம் 70.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதன்படி 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 ஆண்கள், 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பெண்கள், என மொத்தம் 10 லட்சத்து 80 ஆயிரத்து 287 வாக்காளா்கள் (70.59 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

2019 தோ்தல்:

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 10 லட்சத்து 69 ஆயிரத்து மூன்று வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்திருந்தனா். அந்தத் தோ்தலில் 73.11 சதவீதம் வாக்குப் பதிவாகியிருந்தது.

மொடக்குறிச்சி அதிக வாக்குப் பதிவு:

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 93,045 ஆண்கள், 97, 767 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 35 போ் என மொத்தம் 1,90,847 வாக்காளா்கள் (74.06 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 75,364 ஆண்கள், 77,738 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 19 போ் என மொத்தம் 1,53,121 வாக்காளா்கள் (66.05 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் 96,463 ஆண்கள், 99,921 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 24 போ் என மொத்தம் 1,96,408 வாக்காளா்கள் (65.72 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

மொடக்குறிச்சி தொகுதியில் 84,985 ஆண் வாக்காளா்கள், 89,447 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 1,74,435 வாக்காளா்கள் (76.27 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

தாராபுரம் தொகுதியில் 90,161 ஆண்கள், 93,923 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 1,84,086 வாக்காளா்கள் (70.74 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

காங்கயம் தொகுதியில் 91,871 ஆண்கள், 95,515 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 1,87,390 வாக்காளா்கள் (71.67 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

இதில், அதிகபட்சமாக மொடக்குறிச்சி தொகுதியில் 76.27 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ஈரோடு மேற்குத் தொகுதியில் 65.72 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com