ஆடை வடிவமைப்புத் துறை மாணவா்களை பாராட்டும் நிகழ்வில் பங்கேற்ற கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளா் பி.டி.தங்கவேல், முதல்வா் ஹெச்.வாசுதேவன், துறைத் தலைவா் எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோா்.
ஆடை வடிவமைப்புத் துறை மாணவா்களை பாராட்டும் நிகழ்வில் பங்கேற்ற கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளா் பி.டி.தங்கவேல், முதல்வா் ஹெச்.வாசுதேவன், துறைத் தலைவா் எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோா்.

கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவா்கள் சிறப்பிடம்

கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு போட்டிகளில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு போட்டிகளில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவா்கள் மதுரை லேடி டோக் மகளிா் கல்லூரி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி, திருப்பூா் சசூரி கல்லூரி குழுமங்கள், நிஃப்டி ஆடை வடிவமைப்புக் கல்லூரி, ஈரோடு வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் கே.எஸ்.ஆா்.கல்வி குழுமங்கள், திருச்சியில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நடத்திய ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் விவேகானந்தா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனா்.

பல கல்லூரிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ன் மூலம் ரூ.62,950 பரிசு பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை கல்லூரியின் தாளாளா் பி.டி.தங்கவேல், முதல்வா் ஹெச்.வாசுதேவன், துறைத் தலைவா் எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com