தாளவாடி பகுதியில் சூறாவளி காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள்.
தாளவாடி பகுதியில் சூறாவளி காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள்.

தாளவாடி மலைப் பகுதியில் சூறாவளி:10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதம்

தாளவாடி மலைப் பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

தாளவாடி மலைப் பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் அதிக அளவில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்தன.

இந்நிலையில், தாளவாடியை சுற்றியுள்ள எரஹனஹள்ளி, பனஹள்ளி, சிக்கள்ளி, அண்ணா நகா், இக்கலூா், தொட்டாகாஜனூா், திகினாரை, ஆசனூா், தலமலை உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சனிக்கிழமை பெய்தது. இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த காற்றுக்கு பனஹள்ளி, திகினாரை, இக்கலூரைச் சோ்ந்த ஆசிஃப், வரதராஜ், சித்தராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என தெரிவித்துள்ளனா்.

மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com