பெருந்துறையில் ரூ.1.20 கோடிக்கு கொப்பரை விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.20 கோடிக்கு கொப்பரை விற்பனையானது.

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.20 கோடிக்கு கொப்பரை விற்பனையானது.

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்134 டன் கொப்பரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் ஒரு கிலோ கொப்பரை ரூ.27.99 முதல் ரூ.98.80 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.1.20 கோடி மதிப்பிலான கொப்பரைகள் விற்பனையாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com