இருசக்கர வாகனம் மோதியதில் பெண் காயம்

பெருந்துறையில் வாக்களித்துவிட்டு வந்த பெண்ணின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

பெருந்துறையில் வாக்களித்துவிட்டு வந்த பெண்ணின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த திருவாச்சி ஊராட்சிக்குள்பட்ட வாவிகடையைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி செல்லம்மாள் (55). இவா், திருவாச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்துவிட்டு பள்ளிக்கு முன் உள்ள சாலையைக் கடந்து சென்றாா்.

அப்போது, அவ்ழியாக வந்த இருசக்கர வாகனம் செல்லம்மாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com