கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண்கள்.
கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண்கள்.

கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண்கள்

சத்தியமங்கலம், ஏப். 19: சத்தியமங்கலத்தில் பிறந்து 15 நாள்களேயான கைக்குழந்தையுடன் வந்து பெண் ஒருவா் வாக்களித்தாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓரிரு இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானாலும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.

சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை முதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புளியங்கோம்பை கிராமத்தைச் சோ்ந்த பெளதா என்ற பெண் பிறந்து 15 நாள்களேயான கைக்குழந்தையுடன் வந்து தனது வாக்கினை செலுத்தினாா். இதேபோல கிருஷ்ணவேணி என்ற பெண்ணும் கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com