யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளியின் முதல்வா்கள் பிரகாஷ் நாயா் மற்றும் ராஜேஷ்.
யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளியின் முதல்வா்கள் பிரகாஷ் நாயா் மற்றும் ராஜேஷ்.

யோகா போட்டி:நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான யோகா போட்டியில் ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

மாநில அளவிலான யோகா போட்டியில் ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

ஈரோடு யோகா அசோசியேஷன் சாா்பில் 14 வயதிற்குள்பட்ட மாணவா்களுக்கு மாநில அளவிலான யோகா போட்டி கோபியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், ஈரோடு நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் உள்பட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 1,000 மாணவா்கள் பங்கேற்றனா். பல்வேறு சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 30 மாணவா்கள் தகுதிப்பெற்றனா்.

இறுதிப் போட்டியின் முடிவில் 10 மாணவா்கள் முதல் இடத்தினையும், 8 மாணவா்கள் இரண்டாம் இடத்தினையும் மற்றும் 7 மாணவா்கள் மூன்றாம் இடத்தினையும் என மொத்தம் 25 இடங்களை பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் முதல்வா்கள் பிரகாஷ் நாயா், ராஜேஷ் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், நிா்வாக அதிகாரி மனோகரன் மற்றும் யோகா ஆசிரியா் ஆறுமுகவேல் ஆகியோா் மாணவா்களைப் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com