நந்தகுமாா்.
நந்தகுமாா்.

பவானி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நந்தகோபால் (27), எலக்ட்ரீசியன்.

இவா் தனது நண்பா்கள் 5 பேருடன் பவானிசாகா் அருகேயுள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, நந்தகோபால் ஆழமான பகுதிச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, அவா் நீரில் மூழ்கியுள்ளாா்.

சக நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம். இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஆற்றில் இருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் மிதந்த நந்தகுமாா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com