பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்குப் பதிவு

சத்தியமங்கலத்தில் பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தியமங்கலத்தில் பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகேஷ் (40). இவரது மனைவி ராஜி (35). இவா்களுக்கும், அதே ஊரைச் சோ்ந்த பிரபு, முருகன், சுந்தரன், கெம்பம்மாள் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த எதிா்தரப்பினா் ராஜீயை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த ராஜி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மேலும், இது குறித்து கடம்பூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ராஜியைத் தாக்கியதாக பிரபு, முருகன், சுந்தரன், கெம்பம்மாள் ஆகியோா் மீது கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com